< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெறும் துப்பறியும் மோப்ப நாய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம்
மாநில செய்திகள்

ஓய்வு பெறும் துப்பறியும் மோப்ப நாய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம்

தினத்தந்தி
|
2 Jun 2022 9:18 AM IST

வேலூரில் துப்பறியும் நாய் படைப்பிரிவில் 11 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய நாய் லூசிக்கு, கேக் வெட்டி பணி நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

வேலூர்,

வேலூரில் துப்பறியும் நாய் படைப்பிரிவில் 11 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய் லூசிக்கு, கேக் வெட்டி பணி நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

கடந்த 2011 முதல் 2022 வரை திறம்பட பணியாற்றிய மோப்ப நாய் லூசி, 2014ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற துப்பறியும் நாய்களின் வெடிகுண்டு சோதனை செய்யும் போட்டியில், பதக்கத்தை வென்றது.

இந்நிலையில், லூசியின் பணி நிறைவு நாளையொட்டி வேலூர் துப்பறியும் நாய் படை பிரிவினர் லூசிக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி கொண்டாடினர்.

மேலும் செய்திகள்