< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
புதர் மண்டி கிடக்கும் ராஜவாய்க்கால்
|8 July 2023 12:06 AM IST
புதர் மண்டி கிடக்கும் ராஜவாய்க்கால் சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் பஞ்சமாதேவி பிரிவு சாலை அருகே உள்ளது ராஜவாய்க்கால். இந்த ராஜவாய்க்கால் ஆண்டாங்கோவிலில் இருந்து கோயம்பள்ளி, சோமூர் வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் செல்லும் தண்ணீரால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பஞ்சமாதேவி பிரிவு சாலையில் செல்லும் ராஜவாய்க்காலில் செடி, கொடிகள், ஆகாயத்தாமரை உள்ளிட்டவைகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கின்றன. எனவே இந்த செடி, கொடிகளை அகற்றி ராஜவாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.