< Back
மாநில செய்திகள்
குழாய் உடைப்பால்குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார்
தேனி
மாநில செய்திகள்

குழாய் உடைப்பால்குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார்

தினத்தந்தி
|
17 Feb 2023 6:45 PM GMT

கூடலூர் அருகே குழாய் உடைப்பால் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

கூடலூர் நகரப் பகுதி மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த சில மாதங்களாக கூடலூர் பகுதிக்கு மட்டும் தனியாக புதிய நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் மூலம் தரைமட்ட நீர்த்தேக்க தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 10,11,12 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 12-வது வார்டு தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு பகுதியில் கழிவுநீர் ஓடையையொட்டி செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து செல்கிறது. இதன் காரணமாக தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ககை விடுத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்