< Back
மாநில செய்திகள்
இடைத்தேர்தல் முடிவு வெற்றிக்கான குறியீடு கிடையாது - அண்ணாமலை
மாநில செய்திகள்

இடைத்தேர்தல் முடிவு வெற்றிக்கான குறியீடு கிடையாது - அண்ணாமலை

தினத்தந்தி
|
13 July 2024 3:46 PM IST

தேர்தல் முடிவுகளை தலை வணங்கி ஏற்றுக்கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அன்னியூர் சிவா, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"இடைத்தேர்தலாக இருந்தாலும், முக்கிய தேர்தலாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஒரு செய்தி சொல்கின்றனர். தேர்தல் முடிவுகள் குறித்து ஆராயப்படும். 2026-ல் திமுக தனது முழு பலத்தை இழக்கும். இடைத்தேர்தல் முடிவு வெற்றிக்கான குறியீடு கிடையாது என்பது எனது கருத்து.

தேர்தல் முடிவுகளை தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தமிழக மக்களின் எண்ணம், பிரதிபலிப்புதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு என்ற கருத்திலிருந்து மாறுபடுகிறேன். இதை நம்பி திமுகவால் 2026ல் வெற்றிபெற முடியாது."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்