ஈரோடு
மாவட்ட தொழில் மையம் சார்பில் 47 பேருக்கு ரூ.33 கோடி வங்கிக்கடன் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
|மாவட்ட தொழில் மையம் சார்பில் 47 பேருக்கு ரூ.33 கோடி வங்கிக்கடனை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில் 47 பேருக்கு ரூ.33 கோடி வங்கிக்கடன் உதவியை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
தொழில் கடன்
ஈரோடு மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆலோசனை மற்றும் வங்கிக்கடன் நிதி உதவி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்களில் வங்கிகள் மூலம் கடன் பெறும் தொழில் முனைவோர்களுக்கு மத்திய-மாநில அரசுகளின் மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்து அதன்மூலம் வங்கிக்கடன் பெறுபவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.
ரூ.33 கோடி வங்கிக்கடன்
தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வங்கிக்கடன் உதவிக்கான உத்தரவுகளை வழங்கினார். இதன்மூலம் தாட்கோ திட்டத்தின் கீழ் 32 பேர் மொத்தம் ரூ.7 கோடியே 12 லட்சத்து 54 ஆயிரம் கடன் பெற்றனர். மானியத்துடன் கூடிய கடன் உதவியாக 14 பேருக்கு ரூ.25 கோடியே 92 லட்சத்து 36 ஆயிரத்துக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 47 பேருக்கு ரூ.33 கோடியே 4 லட்சத்து 90 ஆயிரம் வங்கிக்கடன் உத்தரவுகள் வழங்கப்பட்டது.