< Back
மாநில செய்திகள்
இலங்கையில் இருந்து படகு மூலம்சீனர்கள் ஊடுருவலா?
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

இலங்கையில் இருந்து படகு மூலம்சீனர்கள் ஊடுருவலா?

தினத்தந்தி
|
2 Feb 2023 6:45 PM GMT

இலங்கையில் இருந்து படகு மூலம் சீனர்கள் ஊடுருவலா?

இலங்கையில் இருந்து படகு மூலம் சீனர்கள் ஊடுருவ உள்ளதாக வந்த தகவலின் பேரில் வேதாரண்யத்தில், கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சீனர்கள் ஊடுருவல்?

இலங்கையில் இருந்து 4 சீனர்கள் தமிழகத்துக்கு கடல் மார்க்கமாக ஊடுவ வாய்ப்பு உள்ளதாக மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறை மூலம் நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து தமிழக கடற்கரையோரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலோர கிராமங்களில் கண்காணிப்பு

அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள சிறுதலைக்காடு, கோடியக்கரை, கோடியக்காடு, மணியன்தீவு, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், நாலுவேதபதி, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் கியூ பிரிவு போலீசார், கடலோர காவல் குழும போலீசார், சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.

புதிய நபர்கள் வந்தால்...

மேலும் யாராவது புதிய நபர்கள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு, போலீசார் அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் இரவு முழுதுவம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் தீவிர சோதனையால் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்