நேற்றைய தினம் கூடுதலாகவே பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு
|கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
சென்னை,
கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என்பது வதந்தி. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதில் ,
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் (பிப்ரவரி 10) கூடுதலாகவே பேருந்துகள் இயக்கப்பட்டன.அதிகாலை 3.30 மணிக்கு பயணிகள் அனைவரும் முழுமையாக அவர்தம் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தினசரி இயங்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன் கூடுதலாக 612 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.