< Back
மாநில செய்திகள்
பெங்களூரு, மைசூரு செல்லும் பஸ்கள் நிறுத்தி வைப்பு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பெங்களூரு, மைசூரு செல்லும் பஸ்கள் நிறுத்தி வைப்பு

தினத்தந்தி
|
27 Sept 2023 3:00 AM IST

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, கோவையில் இருந்து பெங்களூரு, மைசூரு செல்லும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. லாரிகளும் இயக்கப்பட வில்லை.

கோவை


கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, கோவையில் இருந்து பெங்களூரு, மைசூரு செல்லும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. லாரிகளும் இயக்கப்பட வில்லை.

முழு அடைப்பு போராட்டம்

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்கு கன்னட அமைப்புகள், அங்குள்ள விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இதையொட்டி கர்நாடக மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதற்கு பா.ஜ.க., மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

கோவை யில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, மைசூரு உள் ளிட்ட பகுதிகளுக்கு தினசரி 30 பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆனால் நேற்று அதிகாலை நேரத்தில் 3 பஸ்கள் மட்டுமே பெங் களூருக்கு புறப்பட்டு சென்றது. மற்ற பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

லாரிகள் நிறுத்தம்

இதுபோல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு காலை நேரத்தில் 4 பஸ்களும், மாலையில் 4 பஸ்களும் இயக்கப்படுகிறது. போராட்டம் காரணமாக காலையில் 2 பஸ்களும், மாலையில் 2 பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. மற்ற பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு ஓசூர் வரை மட்டுமே இயக்கப் படுகிறது. அங்குள்ள நிலைமையை பொறுத்து நாளை (வியாழக் கிழமை) முதல் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

500 லாரிகள் நிறுத்தம்

கடந்த முறை நடந்த போராட்டத்தின் போது மண்டியா பகுதி யில் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் தீவைத்து எரிக்கப்பட் டன. இதன் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க சரக்கு லாரி போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முருகேசன் கூறும்போது, கோவையில் இருந்து 500 லாரிகள் இயக்கப்பட வில்லை. அங்கு போராட்டம் முடிந்ததும், மாநில லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னர் லாரிகள் இயக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்