< Back
மாநில செய்திகள்
பஸ் பயணம்: நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
மாநில செய்திகள்

பஸ் பயணம்: நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

தினத்தந்தி
|
15 July 2022 8:27 AM IST

பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இலவச பஸ் பாஸ் மூலம் தினமும் லட்சக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது 2019-2020 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டை வைத்திருந்தால், நடத்துநர்கள் மாணவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்