< Back
மாநில செய்திகள்
கறம்பக்குடிக்கு இரவு 11 மணி வரை பஸ் இயக்க வேண்டும்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கறம்பக்குடிக்கு இரவு 11 மணி வரை பஸ் இயக்க வேண்டும்

தினத்தந்தி
|
28 May 2023 7:41 PM GMT

கறம்பக்குடிக்கு இரவு 11 மணி வரை பஸ் இயக்க வேண்டும்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பகல் நேரங்களில் அதிக அளவில் பஸ்கள் கறம்பக்குடிக்கு இயக்கப்படுகிறது. ஆனால் இரவு 7.20 மணிக்கு கடைசி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. பின்னர் கறம்பக்குடிக்கு மறுநாள் காலை 5.30 மணிக்கு தான் பஸ் இயக்கப்படுகிறது. கொரோனா காலத்துக்கு முன்பு ஒரு தனியார் பஸ் இரவு 10.30 மணி வரை இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சைக்கு இரவு 10.30 மணிக்கு மேல் தான் வருகிறது. இந்த ெரயிலில் கறம்பக்குடி பகுதிக்கு செல்பவர்கள் திரளானோர் வருகின்றனர். அவர்கள் ஊருக்கு செல்வதற்கு பஸ்கள் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து கறம்பக்குடிக்கு இரவு 11 மணி வரை பஸ் இயக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்