நாகப்பட்டினம்
பட்டினச்சேரி, பாலையூரில் இருந்து நாகைக்கு புதிய பஸ் சேவை
|பட்டினச்சேரி, பாலையூரில் இருந்து நாகைக்கு புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.
நாகை மாவட்டம் பாலையூர், பட்டினச்சேரி ஆகிய 2 கிராமங்களில் இருந்து நாகைக்கு புதிய பஸ் சேவையினை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது கலெக்டர் பேசுகையில், 'நாகையிலிருந்து பட்டினச்சேரிக்கு தெத்தி வழியாக காலை 8.45 மணிக்கும், மாலை 4.5 மணிக்கும், பட்டினச்சேரியிலிருந்து நாகைக்கு காலை 9.5 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் பஸ் இயக்கப்படுகிறது. அதேபோல நாகையில் இருந்து பாலையூர் கிராமத்திற்கு செல்லூர் வழியாக காலை 8.45 மணிக்கும், மாலை 4.10 மணிக்கும், பாலையூரிலிருந்து நாகைக்கு காலை 9 மணிக்கும், மாலை 4.35 மணிக்கும் பஸ் இயக்கப்படும்' என்றார். நிகழ்ச்சியில் நாகை நகரசபை தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் பொதுமேலாளர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.