< Back
மாநில செய்திகள்
மதுராந்தகம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; தம்பதி சாவு - பொதுமக்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மதுராந்தகம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; தம்பதி சாவு - பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
17 Sept 2023 2:20 PM IST

மதுராந்தகம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக இறந்தனர். அந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மதுராந்தகத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த அவரது மனைவி விஜயலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் இருவரும் உயிரிழந்த நிலையில் மோச்சேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் நெடுஞ்சாலையை கடக்கும்போது தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என்றனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசக்தி மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்