< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் அருகே பஸ்-லாரி மோதல்; 24 பேர் காயம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பஸ்-லாரி மோதல்; 24 பேர் காயம்

தினத்தந்தி
|
6 Aug 2023 3:19 PM IST

காஞ்சீபுரம் அருகே பஸ் - லாரி மோதிய விபத்தில் 24 பேர் காயம் அடைந்தனர்.

பஸ்-லாரி மோதல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா காளியாப்பட்டி கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் காஞ்சீபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தனியார் பஸ் மூலம் வந்தனர். அந்த பஸ் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது காஞ்சீபுரம் அருகே வெள்ளை கேட் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

24 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 பெண்கள் உள்பட 24 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் மற்றும் காஞ்சீபுரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயம் அடைந்த பஸ் டிரைவர் பிரசாந்த் (வயது 32) மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்