< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் பஸ் கண்ணாடி உடைப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பஸ் கண்ணாடி உடைப்பு

தினத்தந்தி
|
24 Jun 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் பஸ் கண்ணாடியை வாலிபா் உடைத்தாா்.

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தொட்டியத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை ஏழுமலை என்பவர் ஓட்டினார். கண்டெக்டராக முருகன் பணியில் இருந்தார்.

இந்தபஸ் கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற அவர், திடீரென வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்திக்கொண்டு, டிரைவரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

ஒரு வழியாக அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்தார். இதன் பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டது. பயணியர் மாளிகை அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த அந்த வாலிபர், திடீரென பஸ் மீது கல்வீசி முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து, டிரைவர் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்ணாடியை உடைத்த வாலிபர் யார்? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமாராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்