< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வு? - போக்குவரத்துத்துறை மறுப்பு
|13 Aug 2024 4:28 PM IST
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை,
தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு,தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து, அந்த முடிவை கைவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியாகும் செய்திக்கு அரசு போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் எந்த கருத்துருவும் இல்லை. பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்த எண்ணம் தமிழ்நாடு அரசிடம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.