< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பேருந்து வசதி பணிகள் தீவிரம்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பேருந்து வசதி பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
23 Jan 2023 12:50 PM IST

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது,

பழனி,

வரும் 27ஆம் தேதி பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நாடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி புளியம்பட்டி அருகே 18 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழனி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்காலிக பேருந்து நிலையத்தில் 26, 27ஆம் தேதிகளில் பழனி நகருக்குள் நுழைய பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது.

தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பழனி கோயிலுக்கு செல்ல 30 அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்