< Back
மாநில செய்திகள்
திம்மூரிலிருந்து திருச்சிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

திம்மூரிலிருந்து திருச்சிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி

தினத்தந்தி
|
17 March 2023 11:57 PM IST

திம்மூரிலிருந்து திருச்சிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி தொடங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள திம்மூர், கூடலூர் மற்றும் இலந்தைக்குழி பகுதிகளில் புதிய வழித்தடத்தில் பஸ் வசதியையும், தார் சாலை மற்றும் மெட்டல் சாலை அமைக்கும் பணியின் தொடக்க விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் குன்னம் அருகே உள்ள திம்மூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, திம்மூரில் இருந்து நேரடியாக திருச்சி மற்றும் அரியலூர் சென்று வருவதற்கு ஏதுவாக அரியலூரில் அதிகாலை 4.55 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு திம்மூர் வந்தடைந்து, பின்னர் 5.30 மணிக்கு திம்மூரிலிருந்து புறப்பட்டு காலை 7.25 மணிக்கு திருச்சி சென்றடையும். அதனைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு திம்மூர் வந்தடைந்து 3.35 மணிக்கு திம்மூரிலிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு அரியலூர் சென்றடையும் வகையில் கூடுதல் பஸ் வசதி சேவையினை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, கூடலூர் கிராமத்தில் ரூ.26 லட்சத்து 95 ஆயிரம் செலவில் மெட்டல் சாலை அமைக்கும் பணியினையும், இலந்தங்குழி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்