திருநெல்வேலி
பஸ் வசதி
|கூடங்குளத்தில் அணுமின் நிலைய கேட் வரை தொழிலாளர்கள் செல்ல பஸ் வசதி- சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
கூடங்குளம்:
கூடங்குளத்தில் அணுமின் நிலைய மெயின் கேட் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு, தனது நிதியிலிருந்து உயர்மின்விளக்கு அமைத்து கொடுத்து அதை பயன்பாட்டிற்கு நேற்று தொடங்கி வைத்தார்.
மேலும் வள்ளியூரில் இருந்து கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி செல்லும் அரசு பஸ்கள் அணுமின் நிலைய கேட் முன் வந்து திரும்பி செல்வதற்கான அனுமதியை பெற்று கொடுத்து அதையும் இயக்கி வைத்தார். இதன் மூலம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து வரும் நிலை மாறி அணுமின் நிலைய கேட்டுக்கு அருகில் வந்து இறங்கி வேலைக்கு செல்கின்றனர். இதற்காக சபாநாயகர் அப்பாவுக்கு பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு, மற்றும் பலர் அந்த காமராஜர் சிலைக்கு பழுதடைந்த நிலையில் உள்ள கிரில் மற்றும் வெயில் மழையில் நனையாமல் இருப்பதற்காக குடை வடிவில் கொட்டகை ஆகியவை அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, சமூைக முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.