தஞ்சாவூர்
திறந்த வெளியில் இறந்தவர் உடலை எரிக்கும் அவலம்
|திறந்த வெளியில் இறந்தவர் உடலை எரிக்கும் அவலம்
இடையிறுப்பு அருகே திறந்த வெளியில் இறந்தவர் உடலை எரித்து வருகின்றனர். எனவே மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திறந்தவெளியில் உடலை எரிக்கும் அவலம்
பாபநாசம் தாலுகா இடையிறுப்பு அருகே உள்ள நெடுஞ்சேரி குடியானத்தெரு உள்ளது. இந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக மயான கொட்டகை வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். மயான கொட்டகை வசதி அமைத்து தர வேண்டும் என கிராமமக்கள் சார்பில் பாபநாசம் தாசில்தார், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை மயானகொட்டகை வசதி செய்துதரப்படவில்லை. இதனால் கிராமமக்கள் இறந்தவரின் உடலை திறந்தவெளியில் வைத்து எரித்து வருகின்றனர். மேலும் மழை காலங்களில் இறந்தவரின் உடலை எரிக்கும் போது பாதி உடல் எரிந்த நிலையில் அணைந்து விடுவதாகவும், அதனால் நாய்கள் உடலை இழுத்து சென்று விடுவதாகவும் கிராமமக்கள் கூறுகின்றனர்.
மயான கொட்டகை வசதி
எனவே கிராமமக்களின் சிரமத்தை உணர்ந்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நெடுஞ்சேரி கிராமத்திற்கு உடனடியாக மயான கொட்டகை வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.