< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
அன்னதான பந்தலுக்கு தீவைப்பு
|15 Aug 2023 12:56 AM IST
அன்னதான பந்தலுக்கு தீவைக்கப்பட்டது.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே உளுத்திமடை ஊராட்சி வாகைக்குளம் கிராமத்தில் அய்யனார், சுந்தரவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 25-ந் தேதி நடைபெற்றது. தற்ேபாது மண்டல பூஜை விழாவையொட்டி கோவில் அருகே பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிடாய் வெட்டும் நிகழ்ச்சிக்கு பின்னர் பூஜைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அன்னதானத்திற்காக போடப்பட்டிருந்த பந்தல் மர்மமான முறையில் திடீரென தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது. அன்னதான பந்தலுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்பது குறித்து கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.