< Back
மாநில செய்திகள்
பாதிரிவேடு அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பாதிரிவேடு அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
24 Jan 2023 2:20 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பாதிரிவேடு அருகே உள்ள பூவலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஸ்ரீ பதி (வயது 76). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்து 5 பவுன் தங்க நகைகளை திருடினர். மேலும், அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை ஊழியர் பாலாஜி (43) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து தனியறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்தனர்.

இது தவிர அருகருகே உள்ள 3 வீடுகளின் பூட்டை உடைக்க முயற்சித்தபோது ஆள்நடமாட்டம் சத்தம் கேட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்