< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
|25 Sept 2022 2:12 PM IST
ஊத்துக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெய்வேலி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). இவர் சென்னை மாங்காடு அருகே உள்ள கொழமணிவாக்கத்தில் உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தாருடன் அங்கு சென்றார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இது குறித்து வினோத்குமார் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.