< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
அச்சரப்பாக்கத்தில் பூட்டி இருந்த வீட்டில் நகை திருட்டு
|5 May 2023 2:48 PM IST
அச்சரப்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 48) வியாபாரி. சம்பவத்தன்று குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு செல்ல வேண்டி தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். பின்னர் பக்கத்து வீட்டினர் வளர்ப்பு நாய்க்கு உணவு கொடுப்பதற்காக சென்றபோது வெளிப்புற கதவு திறக்கப்படாமல் வீட்டின் உள்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக செல்லத்துரையிடம் தகவலை தெரிவித்தனர். பின்னர் செல்லத்துரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 7 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.