கன்னியாகுமரி
அஞ்சுகிராமம் அருகேஜன்னலை உடைத்து கிறிஸ்தவ ஆலயத்தில் கொள்ளை
|அஞ்சுகிராமம் அருகே ஜன்னலை உடைத்து கிறிஸ்தவ ஆலயத்தில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே ஜன்னலை உடைத்து கிறிஸ்தவ ஆலயத்தில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆலயம்
அஞ்சுகிராமம் அருகே புன்னார்குளம் கூண்டு பாலம் அருகில் வேதமாணிக்கப்புரத்தில் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. நேற்று காலை சுமார் 7.45 மணிக்கு ஆலயத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது ஆலய ஜன்னல் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே இதுகுறித்து ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். ஆலயத்தின் உள்ளே ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெஸிமேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை
அதாவது, ஆலயத்தின் உள்ளே ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த சி.டி. பிளேயர் மற்றும் உண்டியலில் இருந்த பணத்தையும் திருடி சென்றது தெரியவந்தது.
கொள்ளை நடந்த ஆலயத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகையை பதிவு செய்தனர்.
மேலும் இது குறித்து ஆலய சபைச் செயலாளர் ஜேக்கப் மற்றும் நிர்வாகிகள் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.