< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
|7 Sept 2022 2:57 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் திருமலைராஜன் (வயது 37), இவர் கடந்த 22-ந்தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சென்னைக்கு சென்றார்.
பின்னர் கடந்த 4-ந்தேதி மீண்டும் வீட்டு்க்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த உண்டியல் பணம், 2 கியாஸ்சிலிண்டர்கள், பட்டு சேலைகள், வெள்ளி பொருட்கள் போன்றவை திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து நேற்று முன்தினம் மறைமலைநகர் போலீசில் திருமலைராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.