< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
விவசாயி வீட்டில் திருட்டு
|6 Oct 2022 10:08 PM IST
தேவதானப்பட்டி அருகே விவசாயி வீட்டில் திருடுபோனது.
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி. இவருக்கு கெங்குவார்பட்டியில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் மோட்டார் மற்றும் மின்வயா்கள் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தார். நேற்று அவர், அங்கு சென்றபோது வீடு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த மின்வயர், மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் தேவதானப்பட்டி ேபாலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.