கிருஷ்ணகிரி
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
|பர்கூர் அருகே ஜிஞ்சம்பட்டியில் இருந்து ஆம்பள்ளி வரை குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பர்கூர்
பொதுமக்கள் சிரமம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ளது ஜிஞ்சம்பட்டி. இங்கிருந்து ஆம்பள்ளிக்கு செல்ல கூடிய சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாக ஜிஞ்சம்பட்டி, ஆம்பள்ளியை சுற்றிலும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள்.
இந்த சாலையின் இரு புறங்களிலும் புதர்கள் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த வழியாக அரசு டவுன் பஸ்கள் செல்கின்றன. அதேபோல பள்ளி, கல்லூரி வாகனங்களும் செல்கின்றன. மழை காலங்களில் பழுதடைந்துள்ள சாலை முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.
பொதுமக்கள் கோரிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குண்டும், குழியுமாக உள்ள சாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழை காலம் என்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமை வேண்டும். அந்த பகுதியில் தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.