< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமாக காணப்படும் சாலை
திருவாரூர்
மாநில செய்திகள்

குண்டும், குழியுமாக காணப்படும் சாலை

தினத்தந்தி
|
21 Nov 2022 12:15 AM IST

திருமக்கோட்டை அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை

சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

திருமக்கோட்டையில் இருந்து பாளையக்கோட்டை வழியாக நத்தம், பரசபுரம், பாலையூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

சீரமைக்க வேண்டும்

இந்த வழியாக சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லி கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடை கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்