< Back
மாநில செய்திகள்
மாட்டுவண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாட்டுவண்டி எல்கை பந்தயம்

தினத்தந்தி
|
31 Aug 2023 11:52 PM IST

ஆவுடையார்கோவில் அருகே மாட்டுவண்டி எல்ைக பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு பாரிவள்ளல் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கிராமமக்கள் சார்பில் 17-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பந்தயத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 90 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

பரிசு

பெரிய மாட்டுவண்டிக்கு 9 கிலோ மீட்டர் தூரமும், நடுமாடு பிரிவுக்கு 7 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாடு பிரிவுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. பந்தயத்தில் எல்கையை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன.

இதில் வெற்றி பெற்ற முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. சாலையில் இருபுறமும் திரளான ரசிகர்கள் நின்று பந்தயத்தை கண்டு களித்தனர்.

மேலும் செய்திகள்