< Back
மாநில செய்திகள்
மாட்டு வண்டி பந்தயம்
மதுரை
மாநில செய்திகள்

மாட்டு வண்டி பந்தயம்

தினத்தந்தி
|
18 July 2023 3:38 AM IST

மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

மேலூர்,

மேலூர் அருகே சுண்ணாம்பூரில் உள்ள பெரியய்யன் கோவில் 8-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. சுண்ணாம்பூர்-திருவாதவூர் சாலையில், பெரியமாடு, சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 69 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டி போட்டியில் 15 வண்டிகள் கலந்து கொண்டன. அதில், நாட்டரசன் கோட்டை காவல்துறை பழனி, சின்னமாங்குளம் அழகு வண்டிகள் முதல் பரிசை பெற்றன. சின்ன மாடு போட்டியில் 36 வண்டிகள் கலந்து கொண்டன. 2 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. முதல் பிரிவில் 18 ஜோடிகள் கலந்து கொண்டதில் கூடலூர் கல்யாணி சுவாமி துணை வழக்கறிஞர் போதும்ராஜா வண்டி முதல் பரிசினையும், 2-வது பிரிவில் சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் வண்டி முதல் பரிசினையும் பெற்றது.

பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்து கொண்டன. அதில் முதல் பரிசு சிறைப்பாறை வெள்ளையன் வண்டி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சுண்ணாம்பூர், கீரனூர், துவரங்குளம், கிராம பொதுமக்கள், விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்