சிவகங்கை
கல்லல், திருப்பத்தூர் பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்
|கல்லல் மற்றும் திருப்பத்தூர் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி
கல்லல் மற்றும் திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
கல்லல் அருகே அரண்மனைசிறுவயலில் உள்ள களத்தி அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 53 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 17 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை புளியங்குடிப்பட்டி மகேஷ்கண்ணன் மற்றும் மாவூர் தேவதாரணி வண்டியும், 2-வது பரிசை நகரம்பட்டி வைத்தியா மற்றும் பொய்கைவயல் மாறன் வண்டியும், 3-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி மற்றும் கீழச்செவல்பட்டி முனீஸ்வரன் ஆகியோர் வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 36 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை தேனி மாவட்டம் போடி மலைச்சாமி மற்றும் புளியங்குடிப்பட்டி சொக்கலிங்கம் வண்டியும், 2-வது பரிசை நெற்புகப்பட்டி சதீஷ்குமார் மற்றும் ஆபத்தாரணப்பட்டி பிரபுபழனிச்சாமி வண்டியும், 3-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் மற்றும் அரண்மனைசிறுவயல் கருப்பாயிதங்கராசு வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை கோட்டணத்தம்பட்டி ரித்தீஸ்வரன் வண்டியும், 2-வது பரிசை நரசிங்கம்பட்டி கார்முகில்ராஜா வண்டியும், 3-வது பரிசை சாத்தமங்கலம் கருப்பையா வண்டியும் பெற்றது.
எஸ்.எஸ்.கோட்டை பந்தயம்
இதேபோல் திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள படைத்தலைவி அம்மன் மற்றும் கருக்குமடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் எஸ்.எஸ்.கோட்டை-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கீழவளவு சக்தி வண்டியும், 2-வது பரிசை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டியும், 3-வது பரிசை ஏனாதி ஏ.டி.எம் மற்றும் கிருஷ்ணன்பட்டி திருஞானம் ஆகியோர் வண்டியும் பெற்றது.
இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 17 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மணவாக்கிபட்டி வாசுதேவன் மற்றும் பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும், 2-வது பரிசை பாதரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் வண்டியும், 3-வது பரிசை எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் ஆகியோர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.