< Back
மாநில செய்திகள்
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தினத்தந்தி
|
25 Sept 2023 11:38 PM IST

ஆவுடையார்ேகாவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே வேள்வரை ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு 4-வது ஆண்டாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 45 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 35 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டு எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன.

கொடிப்பரிசு

பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் மாட்டு வண்டிகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

சாலையில் இருபுறமும் நின்று பந்தயத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் இளைஞர் நற்பணி மன்றத்தினரும், கிராம மக்களும் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்