< Back
மாநில செய்திகள்
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தினத்தந்தி
|
6 Sept 2023 12:38 AM IST

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே முருகாண்டிபட்டி செல்வவிநாயகர், பாலகணபதி, பால தண்டாயுதபாணி கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 29 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு என 2 பிரிவாக நடத்தப்பட்டது.

பெரிய மாடு பிரிவு

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 9 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை மதுரை மேலூர் அழகர் கவுசிக், 2-ம் பரிசு நெம்மேலிகாடு ஓம் உடைய அய்யனார், 3-ம் பரிசு முருகாண்டிபட்டி கணேசன், 4-ம் பரிசு புதுசுக்காம்பட்டி கவின் வசந்த் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

பரிசு

இதனை தொடர்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் 19 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. நடு மாடு போய்வர 7 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை பரளி செல்வி, 2-ம் பரிசு பட்டணம் அகிலேஸ்வரன், 3-ம் பரிசு காரைக்குடி கருப்பண்ணன், 4-ம் பரிசு கல்லல் சக்தி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. இதையடுத்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.

பந்தயம் நடைபெற்ற விராச்சிலை - லெம்பலக்குடி சாலையில் இருபுறமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்