புதுக்கோட்டை
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
|அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே காடை இடையாத்தூர் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 81 ேஜாடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயம் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என 3 பிரிவுகளாக நடைபெற்றது.
பெரிய மாடு பிரிவில் 15 ஜோடி மாட்டு வண்டிகளும், நடுமாடு பிரிவில் 18 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான் மாடு பிரிவில் 48 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
பெரிய மாடு வண்டிக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், நடுமாடு வண்டிக்கு 8 கிலோ மீட்டர் தூரமும், கரிச்சான்மாடு வண்டிக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் எல்கையாக நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.
பரிசு
மாட்டு வண்டிகள் எல்கை நோக்கி சீறிப்பாந்து சென்றன. அப்போது பந்தயத்தை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று கண்டு களித்தனர். பெரிய மாட்டு வண்டி, நடுமாடு வண்டி, கரிச்சான் மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.