< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பர்கூர் அருகேகிணற்றில் விழுந்த மாடுகள் உயிருடன் மீட்பு
|13 May 2023 12:30 AM IST
பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள கீழ் புங்குருத்தி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது விவசாய நிலத்தில் 2 காளை மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 காளை மாடுகளும் சண்டையிட்டு கொண்டன. அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் 2 மாடுகளும் தவறி விழுந்தன. இதுகுறித்து சந்திரன் பர்கூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் தர்மலிங்கம், தீயணைப்பு வீரர்கள் பழனி அன்புமணி, கோபி, விவேகானந்தன், கோகுல் ஆகியோர் விரைந்து சென்று 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்த 2 காளை மாடுகளை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.