< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம்
|9 Aug 2022 9:57 PM IST
ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மயிலாடுதுறை -கும்பகோணம், பொறையாறு- ஆடுதுறை பிரதான பஸ் நிறுத்தமான திருவாலங்காடு கடைவீதியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பூம்புகார் எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்று கூறினார். இதில் திருவாலங்காடு தி.மு.க. ஊராட்சி செயலாளர் பாண்டியன், திருவாலங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கதம்பவள்ளி சின்னையன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜவள்ளி பாலமுருகன், திருவாவடுதுறை ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானு சாதிக் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.