நாமக்கல்
பள்ளி மாணவியை கடத்திய கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது
|பள்ளி மாணவியை கடத்திய கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கந்தம்பாளையம்
கந்தம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் அந்த சிறுமி தனியார் டியூஷன் சென்டரில் படித்து வந்தார். கடந்த 17-ந் தேதி சிறுமி வழக்கம்போல் டியூஷன் சென்டருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பரமத்திவேலூா் அருகே உள்ள பாலப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பண்ணன் மகன் திருநாவுக்கரசு (வயது27). கட்டிட மேஸ்திரி. இவர் பள்ளி மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் திருநாவுக்கரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.