< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'சுவை மிகுந்த உணவுபோல விவசாயிகளுக்கு நலன் பயக்கும் பட்ஜெட் ': கி.வீரமணி பாராட்டு...!
|22 March 2023 6:23 PM IST
சுவை மிகுந்த உணவுபோல விவசாயிகளுக்கு நலன் பயக்கும் பட்ஜெட் கொடுத்து இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுவை மிகுந்த உணவுபோல விவசாயிகளுக்கு நலன் பயக்கும் பட்ஜெட் கொடுத்து இருக்கிறார்கள். விவசாயிகளை வளர்ந்து வரும் விவசாய நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல் உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராட்டி எழுதுவதற்கு எண்ணற்ற அம்சங்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல உள்ளன.
பலரை தொழில் முனைவோர்களாக, உயர்த்திட அடிக்கட்டுமானத்தை ஆழமாக்கிடும் தொலைநோக்குத் திட்டங்கள் இதில் துல்லியமாகப் பளிச்சிடுகின்றன. 'பாராட்ட வார்த்தைகளே இல்லை, என்று பகுத்தறிவு உள்ளோரும், வன்மம் இல்லாது வாழ்த்துவோரும் நிச்சயம் கூறும் வகையில் இப்பட்ஜெட் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.