< Back
மாநில செய்திகள்
பக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

பக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு

தினத்தந்தி
|
13 Sept 2023 1:54 PM IST

பக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 54), கட்டுமான தொழிலாளி. இவர் புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து புதிதாக கட்டும் வீட்டில் கட்டுமான வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கட்டுமான பணியில் இருந்த வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயில் அவரது உடல் மிதப்பதாக சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்