< Back
மாநில செய்திகள்
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
ஈரோடு
மாநில செய்திகள்

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

தினத்தந்தி
|
5 Oct 2023 4:29 AM IST

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணிபாரதி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ராமசாமி, மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் ஓய்வூதியர்களுக்கு முறையான ஓய்வூதியம், மருத்துவ சிகிச்சை, குடியிருப்பு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை மத்திய, மாநில அரசுகள் முறையாக செய்து கொடுக்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்