< Back
தமிழக செய்திகள்

கரூர்
தமிழக செய்திகள்
பி.எஸ்.என்.எல். ஒருங்கிணைப்பு குழுவினர் துண்டு பிரசுரம் வழங்கல்

1 April 2023 12:12 AM IST
பி.எஸ்.என்.எல். ஒருங்கிணைப்பு குழுவினர் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
பி.எஸ்.என்.எல்.லை தனியார் மயமாக்கக்கூடாது. பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி, 5ஜி சேவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல்.இ.யு. ஒருங்கிணைப்பு குழு சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதற்கு மாவட்ட உதவி செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.