< Back
மாநில செய்திகள்
பாடகர் மனோவின் மகன்கள் மீது கொடூர தாக்குதல்- சிசிடிவி காட்சி வெளியானது
மாநில செய்திகள்

பாடகர் மனோவின் மகன்கள் மீது கொடூர தாக்குதல்- சிசிடிவி காட்சி வெளியானது

தினத்தந்தி
|
16 Sept 2024 9:36 PM IST

பாடகர் மனோவின் மகன்கள் தொடர்புடைய வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகளால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் மனோவின் மகன்கள் சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறுவனை மதுபோதையில் தாக்கியதாக மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக் மற்றும் வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மனோவின் மகன்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுபோதையில் வாலிபர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது எழுந்த புகார் விவகாரத்தில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

முன்னதாக பாடகர் மனோவின் மகன்கள் மட்டுமே தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் உள்ளிட்டவர்கள் தங்களது நண்பர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுடன் மனோ வீட்டு வாசலில், அவரது மகன்களை கல் மற்றும் கத்தி உள்ளிட்டவற்றால் தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும் கீழே விழுந்த மனோவின் மகன்களை சிறுவனின் கும்பல் கால்களால் எட்டி உதைக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சியை அடிப்படையாகக் கொண்டு பாடகர் மனோ சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்