< Back
மாநில செய்திகள்
கோமா நிலையில் அண்ணன்... மன வருத்தத்தில் இருந்த தங்கை.. அடுத்து நடந்த சோகம்
மாநில செய்திகள்

கோமா நிலையில் அண்ணன்... மன வருத்தத்தில் இருந்த தங்கை.. அடுத்து நடந்த சோகம்

தினத்தந்தி
|
20 Jun 2024 5:28 PM IST

அண்ணன் மாதேஷ் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மேல் கொச்சாவூரை சேர்ந்தவர் பிரான். இவருடைய மகள் பவானி (வயது 15). இவர் ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய அண்ணன் மாதேஷ் (18). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்.

இதில் தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலையில் அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 16-ந் தேதி பவானி, அவருடைய அக்காள் லட்சுமி ஆகியோர் குடிசாமனப்பள்ளியில் உள்ள அத்தை வீட்டிற்கு சென்றனர். மன வருத்தத்தில் இருந்த சிறுமி பவானி அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் காயம் அடைந்த அண்ணன் கோமா நிலைக்கு சென்றதால் வேதனை அடைந்த தங்கை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்