< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய அண்ணன்- தம்பி கைது
|1 Jan 2023 12:15 AM IST
உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 39). சமையல் தொழிலாளி. இவர் உடன்குடி தங்கநகரத்தில் நடந்த திருமண விழாவுக்கு சமையல் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். வேலை முடிந்து திரும்பி வந்து பார்க்கும் போது அங்கு நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கணேசன் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி குலசேகரன்பட்டினம் தியாகராஜபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சூரியகுமார், அவரது சகோதரர் பட்டுத்துரை ஆகிய இருவரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்.