< Back
மாநில செய்திகள்
அண்ணனை வெட்டிய தம்பி கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

அண்ணனை வெட்டிய தம்பி கைது

தினத்தந்தி
|
27 Jun 2022 11:53 PM IST

களம்பூரில் அண்ணனை வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன்கள் முனியப்பன் (வயது 40), லட்சுமணன் (30). அண்ணன்-தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் லட்சுமணனுக்கு, முனியப்பன் மது குறைவாக வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லட்சுமணன், முனியப்பனை அருவாமனையால் வெட்டியதாக தெரிகிறது.

இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்