< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
அக்காளை தாக்கிய தம்பி கைது
|23 Sept 2023 2:45 AM IST
நிலக்கோட்டை அருகே நிலப்பிரச்சினையில் அக்காளை தாக்கிய தம்பி கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை அருகே உள்ள ஜெயநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 50). இவரது தம்பி பாண்டி. இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலப்பிரச்சிைன ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று பாண்டி, தனது அக்காள் பாண்டியம்மாளுடன் தகராறு செய்தார். மேலும் அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த பாண்டியம்மாள், சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாண்டியம்மாளின் மகன் செல்லமுத்து, நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் வழக்குப்பதிவு செய்து, பாண்டியை கைது செய்தார்.