< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
அண்ணனை தாக்கிய தம்பி கைது
|2 July 2023 12:15 AM IST
முத்துப்பேட்டை அருகே வேலி தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
வேலி தகராறு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த கற்பகநாதர்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் வீராச்சாமி. இவரது மகன்கள் சுப்பிரமணியன் (வயது50), பூமிநாதன் (45). இவர்கள் 2 பேரும் அருகருகே வசித்து வருகின்றனர்.
நீண்டகாலமாக இருவருக்கும் வேலி தகராறு உள்ளது. நேற்று இதுகுறித்து ஏற்பட்ட தகராறில் பூமிநாதன், சுப்பிரமணியத்தை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கைது
இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை தாக்கிய பூமிநாதனை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.