நாமக்கல்
வாலிபருக்கு கத்திக்குத்து; அண்ணன் கைது
|நாமகிரிப்பேட்டை அருகே தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை
நாமகிரிப்பேட்டை அருகே அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி வளர்மதி (வயது 50). இவர்களுக்கு குமரேசன் (33), சசிகுமார் (25) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தனித்தனியே வசித்து கூலிவேலை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் சசிகுமார் தனது தாயார் வளர்மதியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை தாக்கியும் உள்ளார். இதனை தெரிந்துகொண்ட குமரேசன் தனது தம்பி சசிகுமார் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார். அப்போது அண்ணன், தம்பி இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த குமரேசன், அங்கிருந்த கத்தியால் தம்பி சசிகுமாரை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த சசிகுமாரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் குமரேசன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.