திருச்சி
கோவிலின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
|கோவிலின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டுபோனது.
நகைகள் திருட்டு
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே திருவள்ளுவர் அவென்யூ பகுதியில் ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலின் அர்ச்சகர் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்த பின்னர், கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். நேற்று காலை மீண்டும் அவர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது மூலவர் ராஜராஜேஸ்வரி, பரிவார தெய்வங்களான வாராஹி, சாமுண்டி ஆகிய சாமி சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் அந்த கோவிலுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு ப்பதிவு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.