கன்னியாகுமரி
பூதப்பாண்டி அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு
|பூதப்பாண்டி அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ரப்பர் சீட் கடை
பூதப்பாண்டி அருகே உள்ள தடிக்காரன்கோணம் பகுதியை ேசர்ந்தவர் பைஜின். இவர் அந்த பகுதியில் ரப்பர் சீட் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடிக்காரன்கோணம் தோமையார்புரம் சர்ச் தெருவை சேர்ந்த பால்தாஸ் (வயது 66) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு பால்தாஸ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் பால்தாஸ் கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.40 ஆயிரம் திருட்டு
கடையின் உள்ளே ெசன்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேஜையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை காணவில்ைல.
இரவு யாரோ மர்ம நபர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்ைத திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
கடையில் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.